×

காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ED நடவடிக்கை; பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: மால்லிகார்ஜுன கார்கே

டெல்லி: பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என மால்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்த மாதம் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அரசியல் ஆதாயங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. வாக்குப்பதிவு நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; தேர்தல் வந்தவுடன் ED, CBI, IT போன்றவை பாஜகவின் உண்மையான ‘பன்னா பிரமுகர்’ ஆகிவிடும். ராஜஸ்தானில் நிச்சயமாக தோல்வி என்பதை உணர்ந்த பாரதிய ஜனதா தனது கடைசி நகர்வை மேற்கொண்டுள்ளது.

சத்தீஸ்கரை அடுத்து, ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ED நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரம் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம், பொதுமக்கள் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ED நடவடிக்கை; பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: மால்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : ED ,Congress ,BJP ,Mallikarjuna Kharge ,Delhi ,Ashok Khelat ,Rajasthan ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...